"2014 முதல் 353 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை இந்தியா செலுத்தியுள்ளது" - மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
2014ஆம் ஆண்டு முதல் இந்தியா 353 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், பொதுத்துறை, தனியார் பங்கேற்பு திட்டங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் என்ற மத்திய பொதுத்துறை நிறுவனம் நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், விண்வெளித் துறையில் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடமிருந்து 135 விண்ணப்பங்கள் IN-SPACe க்கு வந்துள்ளதாக ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
Comments